ஜே.கே.கே.நடராஜா கலை & அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக இன்று 26.06.2023 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணியை காலை 9.45 மணியளவில் கல்லூரியின் முதல்வர் திருமதி. மங்கையர்க்கரசி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் கஞ்சாவின் புகை உயிருக்கு பகை, போதையின் பாதை தவிர் கல்வியின் நிமிர், போதையில் நீ..! வீதியில் குடும்பம், போதை போதை அது சாவின் பாதை, போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும், போதையின் வீழ்ச்சி சமுதாயத்தின் வீழ்ச்சி, போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும், மற்றும் கோஷங்களை எழுப்பியும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தார்கள். இப்பேரணியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஒருங்கிணைத்தார்கள்.
இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு செய்தார்கள்.