fbpx

Gift an Organ

Description

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் உறுப்பு கல்லூரிகளான ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரிகளானது, பெருநிறுவனங்களின் கூட்டமைப்பின் கிளை அமைப்பான, யங் இந்தியன்ஸின் யுவா கூட்டமைப்பு அமைய பெற்றுள்ளன.

இதில் பல்வேறு சமுக மாற்றத்திற்கான முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளபடும். அதன் ஒரு பகுதியாக, மக்கள் மனதில் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யங் இந்தியன்ஸ் அமைப்பு, புதிய முயற்சியாக மேடை நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி எடுத்து அதனை தமிழ்நாடு முழுவதும் சாலை காட்சியாக கொண்டு செல்ல முடிவு செய்து, முதலில் கோயம்புத்தூரில் துவக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சாலை காட்சியானது, ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவன மைதானத்தில் 07.08.2019 அன்று காலை 11 மணிஅளவில் நடைபெற்றது.

இதில் யுவா அமைப்பின் உறுப்பினர்களான 1135 ஜே.கே.கே.நடராஜா கல்லூரி மாணவ, மாணவிகள் முன்னிலையில் மேடை நாடகம் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் திரு. பூபதி அவர்களும், துணை தலைவர் திரு. தியாகராஜன் அவர்களும் துவக்கி வைத்தனர். ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனரும், ஈரோடு யுவா அமைப்பின் தலைவருமான திரு. செ. ஓம்சரவணா அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜே.கே.கே.நடராஜா கல்வி குழுமத்தின் முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிற்கான ஏற்பாடினை ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பின் நிர்வாக உறுப்பினர் திரு. மணிகண்டபிரசாத் அவர்களும், ஜே.கே.கே.நடராஜா கல்வி குழுமத்தின் யுவா அமைப்பு ஒருங்கிணைப்பாளருமான திரு. ஸ்ரீஜித் விக்னேஷ் அவர்களும், துணை ஒருங்கிணைப்பாளர்களான திரு. மோகன்ராஜ், திருமதி சுமதி திருமதி புனிதமலர், திரு. காமேஸ்வரன் ஆகியோரும் இணைந்து செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு யங் இந்தியன்ஸ் அமைப்பின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர் திரு. பிரபு அவர்களும் பங்கேற்றார்.

Galleries

Start Time

11:00 am

Wednesday, August 7, 2019

Finish Time

2:00 pm

Wednesday, August 7, 2019

Address

College Campus