Founder’s Day Celebration 2019

Description

குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் ”94வது நிறுவனர் பிறந்தநாள் தினவிழாவில் கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

ஜே.கே.கே.நடராஜா பல்மருத்துக்கல்லூரியின் முதல்வர் மருத்துவர் ஏ.சிவகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. ந.செந்தாமரை அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கியதோடு, கொடைவள்ளல் நடராஜா ஐயா அவர்கள் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்பவராகவும், அடிப்படைக் கல்வி, பெண்கல்வி மற்றும் பல்முக கல்வி ஆகியவை குமாரபாளையம் பொதுமக்களுக்கு எளிதில் சென்று சேர அவர் எடுத்த முயற்சிகள், செயல்பாடுகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். அன்னாரின் சேவை மனப்பான்மையை மனதில் நிலை நிறுத்தி, அவர் தோற்றுவித்த இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும், மக்களுக்கு பயன்படும் வகையில் திறம்பட பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் திரு. ஓம்சரவணா அவர்கள் விழாவில் சிறப்புரையாற்றியதோடு, அடுத்த பத்தாண்டுகளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்திறன்களை, பத்து மடங்கு வேகத்தில் இலக்கை அடையும், மூன்சாட்ஸ் திங்கிங் வரும் 2020ஆம் ஆண்டில் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளாக இருக்கும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவயர்கள் இம்முறையினை பின்பற்றி அனைவரும், அவரவர் துறைகளில், எளிதில் மக்களுக்கு சென்றடைந்து பயன்படக் கூடிய, தரமான, நவீனமான புதிய ஆக்கப் பொருட்களை உருவாக்கி, நம் நாட்டின் இன்றைய, எதிர்கால வளர்ச்சியினை தீர்மானிக்கும் வகையில், தங்களை தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். பி. சரஸ்வதி அவர்களும், ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் முதல்வர் முனைவர். கே.தமிழரசு அவர்களும், ஜே.கே.கே.நடராஜா செவிலியர் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆர். ஜமுனாராணி அவர்களும், ஜே.கே.கே.நடராஜா கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு. ஆர்.அர்ஜுனன் அவர்களும், ஜே.கே.கே.நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் முனைவர். டி.பாஸ்கர் அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் பிற்பகலில் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. ந.செந்தாமரை அவர்கள் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், ஜே.கே.கே.நடராஜா மருந்தியல் கல்லூரியின் கல்லூரியின் முதல்வரும், முனைவருமான ஆர்.சம்பத்குமார் அவர்கள் நன்றியுரை கூறினார்.

Our Kodaivallal Thiru. J.K.K.Nattrajah Ayyah 94rth Birthday celebrates as “Founder’s day Celebration” was organized by J.K.K.Nataraja Educational Institutions at College Auditorium on 13th November (Wednesday), 2019.

Galleries

Main
Sports
Cultural

Start Time

10:00 am

Wednesday, November 13, 2019

Finish Time

4:00 pm

Wednesday, November 13, 2019

Address

Auditorium, J.K.K.Nattraja Educational Institutions