Blood Donation Camp

Description

ஊடரங்கு காலம் என்பதால் இரத்த வங்கிகளில் இரத்தம் குறைவாக இருப்பில் உள்ளன. மேலும் நோயாளிகளுக்கான ரத்த தேவையும் அதிகரித்து காணப்படுகின்றன. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு அரசு இரத்த வங்கிகளின் வேண்டுகோள்களின் அடிப்படையில், குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களானது, நம்ம குமாரபாளையம் அமைப்பு, நேரு யுவகேந்திரா, நாமக்கல் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை இரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் இரத்த வகை கண்டறியும் முகாமும், இரத்த தான முகாமும் 21-05-2020 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குமாரபாளையம், ஜே.கே.கே. ரங்கம்மாள் துவக்கப்பள்ளி மற்றும் ஜே.கே.கே. ரங்கம்மாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி ந.செந்தாமரை அவர்கள் இந்த மாபெரும் இரத்ததான முகாமினை துவக்கி வைத்தார். ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனரும், இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளருமான திரு.செ.ஓம்சரவணா அவர்கள் முதலில் இரத்த தானம் அளித்து, தன்னார்வலர்களையும், பொதுமக்களையும் ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேசுகையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் நோயாளிகளுக்கான ரத்த தேவை அதிகரித்துள்ளது. இரத்தம் கிடைக்காமல் பலர் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களும், தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து உயிர் காக்க, இரத்த தானம் செய்யுமாறு தெரிவித்தார்.
மருத்துவர் மோகனா பானு தலைமையிலான மருத்துவக் குழுவினர் தகுந்த கொரோனா பாதுகாப்பு உபகரணங்களுடன் இரத்த வகைகள் கண்டறியப்பட்டு, உரிய பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டன. இந்த இரத்த தான முகாமில் 115 பேர் சமூக இடைவெளியுடன் இரத்ததானம் செய்தனர்.

During this Lockdown, Blood banks are running short of Blood. Hence based on the request of Tiruchengodu Govt Blood Bank. J.K.K.Nattraja Educational Institutions organized Mega Blood donation camp in association with Namakkal Govt Blood Bank and Tiruchengode Govt Blood Bank with Namma Kumarpalayam, Nehru Yuva Kendra Sangathan on 21st May 2020 at J.K.K.Rangammal Elementary School and J.K.K.Rangammal Girls Higher Secondary School, Kumarapalayam.
The Camp was inaugurated by Smt.N.Sendamaraai, Chairperson, J.K.K.Nattraja Educational Institutions, and organized by Mr. S.Ommsharravana, Director, J.K.K.Nattraja Educational Institutions, and donated blood. 115 volunteers and public to donate blood with social distancing.

Galleries

Start Time

10:00 am

May 21, 2020

Finish Time

2:00 pm

May 21, 2020

Address

J.K.K.Rangammal Elementary School, J.K.K.Rangammal Girls Higher Secondary School, Kumarapalayam