Description
அகில இந்திய சிலம்பம் சமேளனம் போட்டியில் குமாரபாளையம் மாணவி வெண்கல பதக்கம் வென்றார்.
அகில இந்திய சிலம்பம் சமேளனம் நடத்திய 18-வது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் டெல்லி, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், ஹரியானா, ஆந்திரா, உத்திரபிரதேசம், கேரளா,பாண்டிச்சேரி, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து 1250 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இதில் 11 வயது கீழ் உள்ளோருக்கான மினி சப்-ஜூனியர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே.ரங்கம்மாள் ஆரம்பப்பள்ளியில் 5ஆம்வகுப்பு படிக்கும் மாணவி M.K. வளர்நிலா ஒற்றை சுருள்வாள் வீச்சு பிரிவில் மூன்றாம் இடம்பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஜே.கே.கே.என் கல்வி நிறுவன தலைவர் ஸ்ரீமதி N.செந்தாமரை அவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர் S.ஓம்சரவணா ஆகியோர் பாராட்டினர். தலைமையாசிரியை R.செல்லம்மாள் உடன் இருந்தார்.
#silambam #martialarts #silambattam #fitness #kalaripayattu #tamilnadu #tamil #silambamtournament #silambamsociety #sports #silambamindia #jkkn #kumarapalayam #komarapalayam #erode #salem #namakkal #india
Galleries