JKKN Dental Hospital at Pallipalayam

JKKN Dental Hospital at Pallipalayam

Satellite Free Dental Clinic was inaugurated by Dr.K.Rajasekar,M.S., Director, Cheran Group of Hospitals, with Shri.S.Ommsharravana, Director, J.K.K.Nattraja Educational Institutions and felicitated by Dr.A.Sivakumar, Principal, Dr.J.V.Karunakaran, Vice Principal (Clinics) and Dr.Senthilkumar, HOD, Dept. of Public Health Dentistry on today (22.04.2021) at Near to Sivasakthi Medicals, Pallipalayam. The clinic will be planned to work from 9.00 am to 3.00 pm everyday basis with emergency treatment like restoration of decayed tooth, Tooth Extraction and Scaling of teeth. The clinic also joined with kodaivallal J.K.K.Nattraja Ninaivu Iyakkam and helping the poor people through E-Sevai Maiyam for getting pan card, and government schemes.
குமாரபாளையம், கொடைவள்ளல் ஜே.கே.கே.நடராஜா நினைவு இயக்கம் மற்றும் ஜே.கே.கே.நடராஜா பலதுறை பல் மருத்துவமனையும் இணைந்து, 22-04-2021 வியாழக்கிழமை அன்று பள்ளிபாளையம், திருச்செங்கோடு மெயின்ரோடு, சிவசக்தி மெடிக்கல்ஸ் அருகில், இலவச பல் மருத்துவமனை திறப்பு விழாவும், சேவை மைய திறப்பு விழாவும் நடைபெற்றன.
பள்ளிபாளையம், சேரன் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே.ராஜசேகரன் அவர்கள் இலவச பல் மருத்துவமனையை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் திரு.செ.ஓம்சரவணா அவர்கள் சேவை மையத்தை துவக்கி வைத்து, முன்னிலை வகித்தார். ஜே.கே.கே.நடராஜா பலதுறை பல் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அ.சிவக்குமார் அவர்கள் பல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் பல்மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் இவ்விழாவில் பங்கு கொண்டனர்.
இம்மருத்துவமனை எல்லா வார நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்பட உள்ளது. சனிக்கிழமை மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட உள்ளது.
பல் சம்பந்தப்பட்ட பல் சொத்தை, பல் கூச்சம், ஈறுகளில் இரத்தக்கசிவு, ஈறு சிதைவு நோய், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், ஆறாத வாய்ப்புண்கள் போன்ற அனைத்து பல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல் பரிசோதனை முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு இலவச செயற்கை பல் செட் வழங்கப்பட உள்ளது. மேலும், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை இலவசமாக பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலவச பல் மருத்துவமனையின் வாயிலாக இலவச பல்மருத்து உதவிகள் கிடைக்கும் என்பதாலும், சேவை மையத்தின் வாயிலாக, 5 லட்ச மருத்துவ காப்பீடு, பான் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் உதவித்தொகை, நலவாரிய பதிவு போன்ற அரசு சார்ந்த உதவி பெறும் சேவைகள் எளிதில் பள்ளிபாளையம் பகுதியுள்ளவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதாலும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

Online Admission Enquiry